1 இந்தியன் 5 மரக்கன்றுகள் நடும் திட்டம்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் கால்நடை அரசு மருத்துவமனை வளாகத்தில் டாக்டர். அப்துல் கலாம் எதிர்கால தொலைநோக்கு அறக்கட்டளை சார்பில் ஒரு இந்தியன் ஐந்து மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலாம் இளமுருகன் தலைமையில் மரக்கன்றுகள் நட்டு வேலி அமைக்கப்பட்டது. விழாவில் அறக்கட்டளை மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல், அறக்கட்டளை உறுப்பினர்கள் ஐயப்பன் ஆசிரியர், செல்வராஜ், தட்சிணாமூர்த்தி, ராமச்சந்திரன், தினேஷ், மணிக்கண்டன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பிரதீஷ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் காக்கும் பெருமாள், காவல் உதவி ஆய்வாளர் பெவின் செல்வ பிரிட்டோ, சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு விழாவை சிறப்பித்தனர். இறுதியில் கால்நடை உதவி ஆய்வாளர் மருத்துவர் பிரசாந்த் நன்றியுரை கூறி விழாவை நிறைவு செய்தார்.