டாக்டர். அப்துல் கலாம் 92-வது பிறந்தநாள் விழா
அரியலூர் மாவட்டம் தா.பழூரில், ஸ்ரீ கிரீன் வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் டாக்டர். அப்துல் கலாம் 92 வது பிறந்தநாள் விழா மற்றும் தா.பழூர். டாக்டர். அப்துல் கலாம் எதிர்கால தொலைநோக்கு அறக்கட்டளை எட்டாம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கப்பட்டது. பள்ளி ஆசிரியை குருலெட்சுமி வரவேற்புரை நிகழ்த்தினார். பின்பு அப்துல் கலாம் திருவுருவ படத்திற்கு அறக்கட்டளை நிர்வாகிகள், பள்ளி நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள், மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் மலர் மரியாதை செலுத்தினர். தா.பழூர் மின்சார வாரிய உதவி மின் பொறியாளர் இளையராஜா கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினார். பள்ளி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு போட்டிகள், ஓவிய போட்டி, பேச்சு போட்டி, கட்டுரை போட்டி வைத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அறக்கட்டளை சார்பாக விருதுகள் பதக்கம் பரிசுகள் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. பள்ளி நிர்வாகி சசிகலா முன்னிலை வகித்தார். டாக்டர். அப்துல் கலாம் எதிர்கால தொலைநோக்கு அறக்கட்டளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலாம் இளமுருகன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்கள் தா.பழூர்.மின்சார வாரிய உதவிமின் பொறியாளர் இளையராஜா, காவல்துறை உதவி ஆய்வாளர் ரவி, தலைமை காவலர் சிற்றரசு. திருவாரூர் மாவட்டம் கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் பால்வளதுறை சேர்ந்த கார்த்திகேயன், பள்ளி தலைமை ஆசிரியை சந்திரா மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் செல்வம், கிறிஷ்டியானாமேரி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் அறக்கட்டளை நினைவு பரிசாக அப்துல் கலாம் திருவுருவ படம் பள்ளிக்கு வழங்கப்பட்டது மற்றும் அப்துல் கலாம் நினைவாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அறக்கட்டளை மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் நன்றியுரை கூறி நாட்டுப்பண் இசைத்து விழா நிறைவுற்றது .